திருத்தணி அடுத்த அய்யனேரி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் திமுக ஒன்றிய செயலாளரின் மகன் அடிக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பதிவு:2023-05-01 15:00:34

திருவள்ளூர் மே 01 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அய்யனேரி கிராமத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை சேகரிக்க அரசு சார்பில் ஆட்களை நியமிக்காமல் ஆர்.கே.பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் பழனி என்பவரது மகன் வினோத் என்பவர் ஆட்களை நியமித்து சேகரிப்பதாக கூறப்படுகிறது. நெல்லை தூற்றி அட்டியிட்டு லாரியில் ஏற்றும் கூலி உட்பட 40 கிலோ எடை கொண்ட சிப்பந்திக்கு 10 ரூபாய்க்கு பதிலாக 50 ரூபாய் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

80 கிலோ மூட்டைக்கு 100 ரூபாயும் அடாவடியாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் 40 கிலோ எடை கொண்ட மூட்டை பிடிக்கும் போது அதில் கூடுதலாக ஒரு கிலோ 300 கிராம் கூடுதலாக எடுத்துக் கொள்வதாகவும், அதே போல் நெல் தூற்றும் போது வரும் கரிக்கால் நெல்லையும் எடுத்துக் கொள்வதாகவும் கூறி இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அய்யனேரி நேரடி கொள்முதல் நிலையத்தில் திமுக நிர்வாகி சார்பில் நடைபெறும் முறைகேடுகளையும் விவசாயிகளிடமிருந்து கூடுதலாக வசூல் செய்வதை தடுத்தும் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் இனி மேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.