கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மே தின விழா

பதிவு:2023-05-02 10:03:09



பூவிருந்தவல்லி நகரம் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மே தின விழா

கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மே தின விழா

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மே தின விழா திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகரம் 44வது கிளை அம்பேத்கார் நகரில் நடைபெற்றது .

கட்டிட தொழிலாளர்களின் மே தின விழாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள்ஆன்லைன் பதிவை நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். அரசு நல வாரியத்தில் சங்கத்தின் முத்திரை இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.மத்திய அரசு கொண்டுவந்த நான்கு தொகுப்பு சட்டங்களை மாநில அரசு நிராகரிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு வி எம் நேரு.மாநிலச் செயலாளர் திரு டி முத்தையன்.மாநில பொருளாளர் ஈ ஜான். மாநிலத் துணை தலைவர்கள்,எஸ். சிவக்குமார் எஸ்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.