புல்லரம்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் : ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி உறுதி

பதிவு:2023-05-02 12:31:31



புல்லரம்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் : ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி உறுதி

புல்லரம்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் : ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில்  சமுதாயக்கூடம்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி உறுதி

திருவள்ளூர் மே 02 : மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் டி.எம்.தமிழ்வாணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.பர்க்கத்துல்லாகான், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.பேபி மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் ஜே.செல்வராணி ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் எஸ்.மணிமேகலை செஞ்சிவீரன், பி.சுசிலாபாபு, எஸ்.ரவிக்குமார், பி.முரளி, ஏ.சாந்தி, எம்.ரோஸ்மேரி மோசஸ் , எஸ்.தமிழ் புதல்வன், ஜே.வெற்றிவேல் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும். வேலை நேரத்தை காலை 7 மணிக்கு பதிலாக 9 மணியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், இலவச வீட்டுமனைப் பட்டா கோரியும், சாலை வசதி ஏற்படுத்தி தரவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

புல்லரம்பாக்கம் கிராமத்தில் 300 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து வருவதால் இந்த கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதே போல் இளைஞர்கள் இந்த கிராமத்தில் அதிகளவில் இருப்பதால் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி பேசும் போது, புல்லரம்பாக்கத்தில் கால்நடைகள் சிகிச்சைப் பெறுவதற்காக நீண்ட தூரம் செல்ல இருப்பதால் இந்த கிராமத்தில் கால்நடை மையம் அமைக்க விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் விவசாயிகளின் வசதிக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்து அறிவித்திருப்பதால் அதனை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில் நிலம் அருகே ஆக்கிரமிப்பாளர்கள் கழிவறை கட்டி அசுத்தம் செய்வதால் பெண்கள், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனால் இரண்டு தரப்பினரையும் வட்டாட்சியர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

அதே போல் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்காக ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் பூதூர் கிராமத்தில் பேருந்து நிழற்குடை அமைக்கவும், பூதூர் காலனியில் மயானம் அமைக்க இடத்தை தேர்வு செய்து அறிவித்தால் அதனையும் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

இதில் வட்டாட்சியர் மதியழகன், திருவள்ளூர் வட்டாட்சியர் ராஜேந்திரன், வேளாண்மைத்துறை சார்பில் ஸ்ரீசங்கரி, மின்வாரியம் சார்பில் யுவராஜ், குமரவேல், கல்வித்துறை சார்பில் வீரராகவன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், வட்டார மருத்துவர் சுபாஷ் சந்திரபோஸ், திமுக நிர்வாகிகள் அப்புன்ராஜ், கபிலன், இ.குமார், இளவழகன், மோகன், லோகநாதன், வழக்கறிஞர் விக்னேஷ், தலைமை ஆசிரியர்கள் சித்ரா, நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.