திருவள்ளூரில் கொட்டும் மழையிலும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் : 12 மணி நேரம் வேலை என அறிவித்துவிட்டு மீண்டும் அதனை வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பது பொது மக்களை ஏமாற்றும் செயல் என முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா குற்றச்சாட்டு

பதிவு:2023-05-02 12:40:10

திருவள்ளூர் மே 02 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா தொழிற்சங்கம் ஏற்பாட்டில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர் வி.குப்புசாமி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.பி. டாக்டர் பி.வேணுகோபால் முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் சா.கலைப்புனிதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பொதுக் கூட்டம் தொடங்கியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்த படி அதிமுகவினர் திரண்டு நிற்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ரூ.30 ஆயிரம் கோடி ரூபாயை முதலமைச்சரின் மகன் உதயநிதி மருமகன் சபரீசன் ஆகியோர் வாரி சுருட்டியிருப்பதாக நிதியமைச்சர் பேசிய ஆடியோ வைரலாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை.

12 மணி நேர வேலை என்று அறிவித்துவிட்டு அதை வாபஸ் பெறுவதாக மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். இதை சட்டமாக்கி அமல்படுத்தியவர் அம்பேத்கர் . அவர் கொண்டு வந்த சட்டத்தை நீர்த்துப் போகும் அளவுக்கு செய்து தொழிலாளர்கள் விரோதப் போக்கை கையில் எடுத்திருப்பதாக குற்றம் சாட்டினார். ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் விஜிலென்ஸ் சோதனை கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் திமுகவுக்கு சம்மந்தமில்லை என சொல்லும் போது அதற்காக ஏன் பயப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் இன்னும் வழங்காத நிலையில் அவர்களை கேலி கிண்டல் செய்வதையே வாடிக்கையாக மந்திரிகள் வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். 2011-ல் தேர்தலின் போது திமுக வினர் வாக்குசேகரித்த போது பொது மக்கள் விரட்டி அடித்தனர். ஆனால் 2021-ல் அதிமுக போட்டியிட்டு 75 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.