பதிவு:2023-05-02 12:48:33
திருவள்ளூர் வீரராகவர் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியன் வீரராகவ சுவாமி திருக்கோவில் கிளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
திருவள்ளூர் மே 02 : திருவள்ளூர் வீரராகவர் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியன் மற்றும் அருள்மிகு வீரராகவ சுவாமி திருக்கோவில் கிளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை தலைவர் தீனா தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் விக்னேஷ் அனைவரையும் வரவேற்றார்.
இதில் மாநில பொதுச் செயலாளர் அ.முத்துசாமி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து வெயிலுக்கு இதமான குளிர்ச்சியான மோர். தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட தாகம் தீர்க்கும் பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ரமேஷ், மாநில துணைத் தலைவர் எஸ்.தனசேகர், கௌரவத் தலைவர் முனிரத்தினம், பொருளாளர் சுபாஷ், அமைப்பாளர் பாலாஜி மற்றும் கிளை நிர்வாகிகள் ஜெயவேல், லோகநாதன், ரவிக்குமார், கும்பாராஜ், ஜனார்த்தனன், தயாளன் , பார்த்திபன் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.