திருவள்ளூர் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1.25 கோடி மோசடி : மதுரையைச் சேர்ந்த அக்குபஞ்ச்சர் டாக்டர்கள் 2 பேர், காவலரின் மனைவி உள்பட 3 பேரை கைது

பதிவு:2023-05-04 21:38:06

திருவள்ளூர் மே 04 : மதுரை மாவட்டம் பசுமலை பகுதியைச் சேர்ந்தவர் குமரபிரபு. இவரது மனைவி மகாலட்சுமி. கணவன் மனைவியான இவர்கள் இருவரும் அக்குபஞ்ச்சர் மருத்துவர்கள். மதுரையில் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாரத்திற்கு ஒரு முறை திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குன்றத்தூரில் சிகிச்சை மையம் அமைத்து வந்து அங்கு சிகிச்சை அளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்த குன்றத்தூரில் உள்ள அக்குபஞ்ச்சர் மையத்தில் ஆவடி காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் தினேஷ்குமாரின் மனைவி ஷர்மிளா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அக்குபஞ்ச்சர் மருத்துவம் பார்ப்பதுடன் ஆன் லைன் வர்த்தகம் மூலம் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், தீபாவளி பண்டு, சீட்டு பண்டு ஆகியவற்றையும் நடத்தி வந்துள்ளனர். இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா தேவம்பட்டு கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சௌமியா (26) மற்றும் பலர் இணைந்துள்ளனர். ஆன்லைன் மூலம் ரூ.1.25 கோடி ரூபாய் வரை வசூலித்த குமரபிரவு மற்றும் மகாலட்சுமி ஆகியோர் மளிகைப் பொருட்களை தராமலும், தீபாவளி பண்டு பொருட்களை வழங்காமலும், சீட்டு பணம் தராமலும் :ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சௌமியா உள்ளிட்ட 5 பேர் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் டிஎஸ்பி கந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் தனிப்படை போலீசார் மதுரையில் பதுங்கியிருந்த அக்குபஞ்ச்சர் மருத்துவர்கள் குமரபிரபு, அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் அவரிடம் வேலை பார்த்து வந்து காவலரின் மனைவி ஷர்மிளா ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.