பதிவு:2023-05-04 21:41:12
கடம்பத்தூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர் கொண்டு செயல்படுத்த வேண்டி முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மே 04 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர் கொண்டு செயல்படுத்த வேண்டி முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சத்துணவு ஊழியர் சங்க கடம்பத்தூர் ஒன்றிய தலைவர் நர்மதா தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் அந்தோணிராஜ்,பாஸ்கர்,சம்பத்குமார்,தயாளன்,ஜெயா, வனிதா, பார்வதி,லட்சுமி,விஜயா,சபீனா,சரஸ்வதி,துஸ்தினா,பூங்கொடி,செலத்மேரி,அமுதா,வள்ளியம்மாள்,சாந்தி,அனிதா,ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் பேபி அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட இணை செயலாளர் தேன்மொழி,சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், லூர்துசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்,தகுதிக்கு ஏற்ப நிரந்தர காலி பணியிடங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.6750 ம் அகவிலைபடியும் சேர்த்து வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இறுதியாக ஒன்றிய பொருளாளர் பாலசரஸ்வதி நன்றி கூறினார்.