பதிவு:2023-05-04 21:45:11
பூண்டி மேற்கு ஒன்றியத்தில் பூர்த்தி செய்யப்பட்ட திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் : மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்எல்ஏவிடம் ஒப்படைப்பு
திருவள்ளூர் மே 04 : தமிழ்நாடு அமைச்சரும் திமுக தலைவருமானன மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் பூண்டி மேற்கு ஒன்றியத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறுப்பினர் சேர்க்கை முகாமை மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் டி. கிறிஸ்டி என்கிற அன்பரசு தலைமை தாங்கினார்.இதில் பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பா.சிட்டிபாபு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தா.மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்எல்ஏ மற்றும் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் ராஜா குப்புசாமி ஆகியோர் திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பூண்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பட்டறை பாஸ்கர் , சித்ரா ரமேஷ், ஆனந்தன், தேவேந்திரன், டில்லிபாபு, சௌக்கார் பாண்டியன், நடராஜன் உள்பட மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.