திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் ரூ.3.25 இலட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

பதிவு:2022-04-28 10:03:01



திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் ரூ.3.25 இலட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் ரூ.3.25 இலட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஏப் 28 : திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் இல்லா திருவள்ளுவர் மாநகரை உருவாக்குவோம் என்ற திட்டத்தின்படி, செயின்ட் கோபின் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக ரூ.3.25 இலட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் திருவள்ளூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை துவக்கி வைத்து, மறுசுழற்சி செய்யப்படும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து பேசினார்.

நம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் பெரிய அளவில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்து, ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.1,25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்து, ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தொடரும். அது மட்டுமல்லாமல் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்றாலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியம். அந்த வகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயின்ட் கோபின் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யும் இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் திருவள்ளுர் பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் தாங்கள் உபயோகித்த பிளாஸ்டிக் பாட்டில்களை இயந்திரத்தில் வைக்கும்போது அதில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்படும். நல்ல முறையில் இத்திட்டத்தை துவங்கியிருக்கிறோம். கூடிய விரைவில், மாவட்ட முழுவதும் பிளாஸ்டிக் இல்லா திருவள்ளூர் என்ற இலக்கை எட்டுவதற்கான பணிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதில் திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் நகரமன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் (பொ) எம்.நாகூர் மீரான் ஒலி, திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், திருவள்ளூர் நகரமன்ற உறுப்பினர்கள், W2W Enterprises நிறுவனர் ஏ.தனலட்சுமி, செயின்ட் கோபின் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உயர் கண்காணிப்பு அலுவலர் கே.எஸ்.மாதவன், மேலாளர் மதுசூதன குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.