பதிவு:2023-05-04 21:46:28
திருவள்ளூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு தொடர்பாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணிகள் செய்யும் பொருட்டு இயக்கம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் மே 04 : சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுபுறம் மனித இனத்தின் உடல்நலம், உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கு உத்தரவாதம் அளிப்பதோடு வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் கூறுகளாகும். கிராம அளவில் தூய்மையான சுற்றுச்சூழல், எழில்மிகு கிராமங்களை நோக்கிய பயணம் என இவ்வியக்க செயல்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. 15.06.2023 வரை நடைபெறவுள்ளது.
“நம்ம ஊரு சூப்பரு" இயக்கம் நடவடிக்கைகளில் ஒரு முறை பயன்படும் நெகிழி இல்லா கிராமங்களாக மாற்றுதல், பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது தண்டத் தொகை விதித்தல் மற்றும் வசூலித்தல் குறித்த முடிவுகள், வீடுகளில் கழிவுகளை பிரித்தல், இயக்கத்தின் மூலம் நிலையினை நீடித்த சுகாதார நிலை ஏற்படுத்துதல்.
இயக்க காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பள்ளி கல்வித்துறை, உயர் கல்வி துறை, வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலம், சமூகநலம், வனத்துறை, உணவுப் பாதுகாப்பு துறை, கூட்டுறவுத்துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், ஊரக குடிநீர் திட்டம், பொதுப்பணித் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என அனைத்து அரசுத்துறைகளும் பங்குபெற்று அவற்றின் அலுவலகங்கள் மற்றும் இதர நிறுவனங்களிலும் பெரும்திரள் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், தொடர்புடைய துறைகள் மூலம் மரக்கன்றுகள் நடுதல், கழிவுகளை பிரித்து மேலாண்மை செய்தல், ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு போன்ற பணிகளும் நடைபெறவுள்ளது.இவ்வியக்கத்தின் நோக்கமே நிடித்த நிலையான தூய்மை கிராமங்களாக நமது ஊரக பகுதிகளை மாற்றி அமைத்து என்றுமே "நம்ம ஊரு சூப்பரு" என தெரிவிக்கும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.