திருவள்ளூர் பெரியகுப்பத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புதிதாக குடியிருப்புகள் உருவாகும் பகுதியில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என பலர் கோரி்ககை மனு :

பதிவு:2023-05-05 17:08:44

திருவள்ளூர் மே 05 : திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுனில் குமார் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.கனகராஜன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும். புதிதாக குடியிருப்புகள் உருவாகும் பகுதியில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என பலர் கோரி்ககை மனுவை அளித்தனர். அதே போல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டியும் ஒரு சிலர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்த கூட்டத்தில் உதவி செயற் பொறியாளர்கள் குமார், ஜானகிராமன், சேகர், பாலச்சந்தர், யுவராஜ் மற்றும் உதவி பொறியாளர்கள் தட்சிணாமூர்த்தி, கஜேந்திரன், பாலாஜி, ரமேஷ், குமரவேல், காஞ்சனா வெங்கடேஷ் உள்பட பலர் கலந்த கொண்டனர்.