திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளில் தீர்த்தவாரி : சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் :

பதிவு:2023-05-05 17:12:21

திருவள்ளூர் மே 05 : 108 வைணவ திவ்ய தேசங்களில் திருவள்ளூர் வைத்திய வீரராகவர் திருக்கோயிலும் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

சித்திரை பிரம்மோற்சம் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 7-ம் நாளான வியாழக்கிழமை தேரோட்டமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான இன்று காலையில் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் முக்கிய மாடவீதிகளின் வழியாக பல்லக்கில் பவனி வந்தார். அதைத் தொடர்ந்து கோயில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. சக்கரத்தாழ்வார் மற்றும் சின்னபெருமாளும் கோயில் குளத்தில் நீராடினர்.

வீரராகவப் பெருமாள் கோயில் குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்பதால் இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வீரராகவரை வழிபாடு செய்து குளத்தில் நீராடி வழிபட்டனர்