ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயில் குளக்கரை அருகே மீட்கப்பட்ட பிறந்த 10 நாட்களே ஆன குழந்தைக்கு ஆனந்த் என பெயர் சூட்டி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒப்படைத்தார் :

பதிவு:2023-05-05 17:16:15

திருவள்ளூர் மே 05 : திருவள்ளுர் நகராட்சி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயில் திருக்குளம் அருகில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி பிறந்து 10 நாட்களேயான ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் மூலம் திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக மீட்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் அக்குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் மருத்துவ மனையிலிருந்து அக்குழந்தையைப் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அந்த குழந்தைக்கு “ஆனந்த்” என்று பெயர் சூட்டி, அக்குழந்தையின் நலனிற்காக திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.நிஷாந்தினி, நன்னடத்தை அலுவலர் சையத் ரகுப், குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்ஸிலியா, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.