திருவள்ளூர் மாவட்டத்தில் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கி எங்களது வாழ்வை காத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர் :

பதிவு:2023-05-05 17:19:06



திருவள்ளூர் மாவட்டத்தில் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கி எங்களது வாழ்வை காத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர் :

திருவள்ளூர் மாவட்டத்தில் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கி எங்களது வாழ்வை காத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர் :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் வாழ்வு சிறந்தோங்க பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கடந்த ஓராண்டு காலத்தில் கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை, மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி சிறப்பாசிரியர்களுக்கான ஊதியம், கட்டிட மானியம், உணவூட்டும் மானியம்,சட்டம் பயின்ற மாற்றுத்திறனானிகளுக்கு நிதி உதவி,மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு திட்டம், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம், மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை, கை, கால்,பார்வையற்றோர், காதுகேளாதோருக்கான திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளி மாற்றுத்திறனாளியினை மணந்து கொள்ளும் திருமண உதவித்திட்டம், தமிழ்நாடு நல வாரியம் உறுப்பினர் திட்டம், சுய தொழில் வங்கி கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 21,063 நபர்களுக்கு ரூ.31,52,13,239 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தாங்கள் விரும்பும் உதவி உபகரணங்கள் பெறும் திட்டத்தின் கீழ் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முதுகு தண்டுவட பாதிப்;புக்குள்ளான 11 நபர்களுக்கு தலா ரூ.1,05,000-ம் வீதம் என மொத்தம் ரூ.11,55,000-ம் மதிப்பீட்டிலான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகள் தாங்கள் விரும்பும், உதவி உபகரணங்கள் பெறும் திட்டத்தின் கீழ் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை பெற்று பயனடைந்த திருவள்ளுர் வீரராகவபுரத்தை சேர்ந்த கோபி என்பவர் தெரிவித்ததாவது : நான் முன்பு கட்டுமான பணியாளராக வேலை செய்து கொண்டிருந்தேன். எனது முதுகு தண்டுவடம் தீவிரமாக பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனது. வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது. நான் எங்கு செல்ல வேண்டி இருந்தாலும் எனது மனைவி மற்றும் பிள்ளைகளின் உதவி இல்லாமல் ஒரு இடத்திற்கு கூட செல்ல மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்த வேளையில், மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை இலவசமாக வழங்கினார்.இந்த சிறப்பு சர்க்கர நாற்காலி மூலமாக நான் எந்த இடத்திற்கும் எளிதாக செல்ல முடிகிறது. இதை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதே போல் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை பெற்று பயனடைந்த மாநெல்லூர் பகுதியில் வசித்து வரும் நஃபீஸ் என்பவர் கூறுகையில்,நான் தனியார் நிறுவனத்தில் கணக்கு பிரிவில் பணிபுரிந்து வந்தேன்.ஒரு விபத்தில் எனது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக நடக்க முடியாமல் போனது. அதனால், வெளியில் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனது தாய் கூலி வேலைக்குச் சென்று வரும் வருமானத்தை வைத்து தான், நாங்கள் வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக கையாளும் மாற்றுத்திறனாளிகள் துறை மூலமாக எனக்கு இலவசமாக மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கினார். தற்பொழுது எங்கு வேண்டுமானாலும் யாருடைய உதவியுமின்றி வெளியில் சென்று வர முடிகிறது.

இந்தச் சிறப்பு சக்கர நாற்காலியை இலவசமாக எனக்கு வழங்கி என் வாழ்க்கைக்கு அச்சாரமிட்டதோடு மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் துவண்டு கிடந்த எனக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் உதவி புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களையும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் முன்னேற்றுகின்ற வகையிலும் பல்வேறு திட்டங்களை தீட்டி, அதனை சிறப்பாக செயலாற்றி வருவதற்கு திருவள்ளுர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.