பதிவு:2023-05-05 17:21:34
திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் மே 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் பண்டகப்பாடி திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரை ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வெறியாக தாக்கியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் பண்டகப்பாடி திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரை கொலை வெறியாக தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வேண்டும்,திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊராட்சியில் பணி பாதுகாப்பு வேண்டும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வேறு ஊராட்சியில் இருந்து மற்றொரு ஊராட்சியில் பணிபுரிவதால் அடையாள அட்டை வழங்க வேண்டும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊராட்சி நிதியிலிருந்து பெறும் ஊதியம் ரூ.2500 பெறுவது சிரமமாக உள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. ஆகவே விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு செய்து செய்து தர வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் 60 வயது முடிந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும் ஆவண செய்ய வேண்டும், ஓய்வு பெறும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஓய்வு பணிபலன் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுகுமார்,மாவட்ட பொருளாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடம் மனு அளித்தனர்.இம்மனு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தின் பேரில் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.