திருவள்ளூர் மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமூகநீதி பாதுகாப்பு சென்னை மண்டல மாநாட்டிற்கான செயல்வீரர்கள் கூட்டம்

பதிவு:2023-05-11 15:36:11

திருவள்ளூர் மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமூகநீதி பாதுகாப்பு சென்னை மண்டல மாநாட்டிற்கான செயல்வீரர்கள் கூட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமூகநீதி பாதுகாப்பு சென்னை மண்டல மாநாட்டிற்கான செயல்வீரர்கள் கூட்டம்

திருவள்ளூர் மே 10 : சென்னை மண்டல அளவில் மறைமலை நகரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நீதியரசர்கள் ராஜேந்திர சச்சார், ரங்கநாத் மிஸ்ரா ஆகியோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய அளவில் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 15 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இந்திய தேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமூக நீதிப் பெரும் வகையில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் போன்ற இரு பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி பாதுகாப்பு சென்னை மண்டல மாநாடு வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணவாள நகரில் உள்ள ஜே. கே. ஆர் தனியார் திருமண மண்டபத்தில் சமூகநீதி பாதுகாப்பு சென்னை மண்டல மாநாட்டிற்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட சேக் தாவூத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சமூகநீதி பாதுகாப்பு சென்னை மண்டல மாநாட்டில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாநில அமைப்பு செயலாளரும் மாவட்ட பொருளாளருமான அமீன் சுல்தான், மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா, அஸ்காப், அக்பர்,அன்ஸருத்தீன், அப்துல் அஜீஸ் ஆகியோர் விளக்க உரையாற்றினர். இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இறுதியாக மாபாஷா என்கின்ற பாட்ஷா பாய் நன்றி கூறினார்.