பதிவு:2023-05-11 15:43:05
ஒதப்பையில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் முறையாக ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருவள்ளூர் மே 11 : திருவள்ளூர் அடுத்த ஒதப்பை பகுதியில் செயல்பட்டு வரும் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டிஆர் ஆக்சியன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் 1500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் ஆண்டுதோறும் நிறுவனங்களில் வழங்கப்படும் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி பலமுறை நிர்வாகத்திடம் கோரிக்க வேண்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து முறையாக ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையையும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 முதல் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில் இதுவரை சம்பளம் உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் சென்றனர். இதனால் தொழிற்சாலை அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.