பதிவு:2023-05-11 15:44:40
திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் மே 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் "சகி" என்ற பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பணிபுரிய திருவள்ளூர் மாவட்டத்தில் நிரத்திர முகவரியை கொண்ட கீழ்கண்ட நிலைகளில் தகுதி பெற்ற பெண் நபர்களினை ஒப்பந்த பணியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர். திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 23.05.2023-ற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொழிற் நுட்ப பணியாளர் Diploma in Computers or IT கல்வி தகுதியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தேர்ச்சி பெற்று அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களின் நிர்வாக அமைப்பில் அல்லது அதற்கு வெளியில் Data Management, Process Documentation and Web-based reporting formats போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் தேவை. மாத சம்பளம் ரூ.18,000 வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வழக்கு பணியாளர் (காலிப்பணியிடம் - 1) : சமூக பணியில் இளங்கலைப் பட்டம், சமூகவியல்,சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம்,உளவியல்,சட்டம் ஆகிய கல்வி தகுதியுடன், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களின் நிர்வாக அமைப்பில் அல்லது அதற்கு வெளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் தேவை. மாத சம்பளம் ரூ.12,000 வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2ஆம் தளம் என்ற முகவரியினை தொடர்பு கொள்ளலாம். தொலைப்பேசி எண்.044-29896049 என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.