திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-05-11 15:45:57



திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மே 11 : முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக வரும் ஜூன் மாதம் 6 வட்டாரங்களிலும், நகர்புறங்களில் 3 பேரூராட்சிகளிலும் 2 வது கட்டமாக மீதமுள்ள வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் ஜூலை -15 முதல் ஊரகம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான உணவுகளை தயாரித்திட SHG/PLF/ALF சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக,இப்பணியானது நிரந்தரமான பணியல்ல அதே தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களில் தகுதியான நபர்களை தேர்வு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட நபர்களின் குழந்தை அந்த தொடக்கப்பள்ளியை முடித்து வேறு பள்ளிக்கு செல்லும் போது மற்றொரு தகுதியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும். சமையலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள்.சமையலர்கள் தேர்ந்தெடுப்பதில் ஆட்சேபணை இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாளரும் மகளிர் திட்ட இயக்குநரிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.