பதிவு:2022-04-30 22:38:49
திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வேளாண் பெருவிழா :
திருவள்ளூர் ஏப் 28 : திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைந்து வேளாண் பெருவிழா நடைபெற்றது.
விழாவில் பேராசிரியரும் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளருமான பெ.சாந்தி இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம்,சிறு தானியங்களின் முக்கியத்துவம்,எண்ணெய் வித்துப் பயிர்கள்,தகவல் தொழில்நுட்பம் மூலம் வேளாண் விரிவாக்கம் ஆகியவற்றை குறித்து உரையாற்றினார்.
பின்னர் வேளாண்மை இணை இயக்குநர் திருட்சுரேஷ் அரசின் வேளாண் திட்டங்கள்,உழவர் கடன் அட்டை,பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் இதர திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் பங்களிப்பே எனது முன்னுரிமை நிகழ்வை இந்திய ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொளி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
மேலும் பண்ணை இயந்திரங்கள்,புதிய நெல் இரகங்கள்,உயிர் உரங்கள்,சிறுதானிய இரகங்கள்,மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்,டுரோன் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. அப்பொழுது டுரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து தோட்டக்கலை துணை இயக்குநர்,வேளாண் துறை அலுவலர்கள்,வேளாண் விஞ்ஞானிகள் - உழவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.விழாவில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.