பதிவு:2023-05-12 13:07:39
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் மே 12 : திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அலிம்கோ நிறுவனம் வாயிலாக சி.எஸ்.ஆர் நிதி உதவியுடன் திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி மற்றும் சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள் ,சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கைகால் மற்றும் கை,காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் ஆகிய உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக தேர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் 23.05.2023 அன்று திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருத்தணி,பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரையும், 25.05.2023 அன்று பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும்,26.05.2023 அன்று கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிமுதல் 2 மணி வரையும், 27.05.2023 அன்று பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி காலை 9 மணி முதல் 2 மணி வரையும்,30.05.2023 ஆவடி அன்று அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி, காமராஜர் நகர், ஆவடி காலை 9 மணி முதல் 2 மணி வரையும் 31.05.2023 அன்று திருவள்ளூர் டி.இ.எல்.சி. பெரியகுப்பத்தில் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.