பதிவு:2023-05-12 13:09:49
சிற்றம்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் 126 ம் ஆண்டு ஜாத்திரை திருவிழா : பெருந்திரளான பக்தர்கள் அம்மன் அருளை பெற்றனர் :
திருவள்ளூர் மே 12 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிற்றம்பாக்கம் ஊராட்சியில் 126 ஆம் ஆண்டு ஜாத்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இவ்விழாவை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாள் பக்தர்கள் காப்பு கட்டுதல், கணபதி பூஜை ஆகியவையும் திங்கள்கிழமை 1008 பால்குட ஊர்வலம் செவ்வாய்க்கிழமை அம்மன் கிரகம் மற்றும் கூழ்வார்த்தல் அம்மனுக்கு பொங்கல் வைத்தல் திருவீதி உலா மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கிராம எல்லையில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மன் மற்றும் பெருந்திரளான பெண் பக்தர்கள் தலையில் கூழ், பொங்கல் படையல், பூ, வாழைபழம், வெற்றிலை, தேங்காய் சீர்வரிசைகளை தலையில் சுமந்தபடி சிற்றம்பாக்கம் தென்காரணையில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்திற்கு சென்றனர். பின்னர் அங்குள்ள வயல்வெளியில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், பன்றி வதம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதை தொடர்ந்து கெடா வெட்டுதல் கோழி பலி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாயங்கள் நடைபெற்றன இத் திருவிழாவில் சிற்றம்பாக்கம் பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரலான ஆண் பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.