பதிவு:2023-05-12 13:11:44
ஆயில்மில் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஆவின் பாலகம் திறப்பு :
திருவள்ளூர் மே 12 : திருவள்ளூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அலுவலக வளாகத்தின் வெளியே முக்கிய சாலையில் ஆவின் பாலகம் கடந்த 2013-இல் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.அலுவலக வளாகம் வெளியே சாலை ஓரத்தில் சிறிய கடை போன்று கட்டப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் அதனை முறையாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்ட அந்த பாலகம் திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி. சண்முகவள்ளி தலைமை தாங்கி பாலகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள் அ.காத்தவராயன், இரா.ரவி, சி.வி.கருணாகரன், செல்வி ஆகயோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருவள்ளூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் விஜய் வேலன், மேலாளர் தண்டபாணி, எழுத்தர் ஞானபிரகாசம் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் கை.கு.கார்முகன், இளங்கோ மற்றும் பணியாளர்கள், நியாய விலை கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.