திருவள்ளூர் அருகே கோழிக்கறி கூடுதலாக கேட்டு தராததால் சண்டை : ஜிம் மாஸ்டர் மற்றும் அவரது தம்பிக்கு அரிவாள் வெட்டு : மர்ம நபர்களுக்கு போலீல் வலை வீச்சு :

பதிவு:2023-05-12 13:13:50

திருவள்ளூர் மே 12 : திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் பகுதியில் அர்ஜுன் பவர் ஜிம் என்ற உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் சுரேஷ(40). இவர் அதே பகுதியில் பூஜா சிக்கன் சென்டர் என்ற கோழி கறி கடையையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியைச் சேர்ந்த சிலர் சுரேஷ் கடையில் கறி வாங்க வந்தவர்கள் கூடுதலாக கறி போடும்படி கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜிம் மாஸ்டர் சுரேஷ்-க்கும் கோழிக்கறி வாங்க வந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் (10-ந் தேதி) இரவு சுரேஷின் ஜிம்மிற்கு வந்த 15-க்கும் மேற்பட்டோர் ஜிம்மில் இருந்த ஜிம் மாஸ்டர் சுரேஷ் மற்றும் அவரது தம்பி பாஸ்கரன் ஆகியோரை தாக்கியதுடன் அறிவாளாலும் தலை, கால், கை என சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த ஜிம் மாஸ்டர் சுரேஷ் மற்றும் அவரது தம்பி பாஸ்கரன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது சுரேஷ் மற்றும் தம்பி பாஸ்கரன் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிம் மாஸ்டரை வெட்டியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழிக்கறி வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஜிம் மாஸ்டர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.