கோயில் தேர் திருவிழாவின் காலனி பகுதிக்கு வராதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு : வட்டாட்சியர் தலைமையில் இருதரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகம் :

பதிவு:2023-05-12 13:15:58



கோயில் தேர் திருவிழாவின் காலனி பகுதிக்கு வராதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு : வட்டாட்சியர் தலைமையில் இருதரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகம் :

கோயில் தேர் திருவிழாவின் காலனி பகுதிக்கு வராதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு : வட்டாட்சியர் தலைமையில் இருதரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகம் :

திருவள்ளூர் மே 12 : திருவள்ளூர் வட்டம், கொட்டையூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் தேர் விழாவின் போது தேர் கிராம பகுதியில் மட்டுமே சுற்றி வருவதாகவும், காலனி பகுதிக்கு வராததால் சாதி தீண்டாமை பிரச்சினை எழுவதாக கூறப்படுகிறது. எனவே காலனி பகுதிக்கு தேர் உலா வர அனுமதிக்க வேண்டும், இல்லையெனில் தேர் திருவிழாவிற்கு தடை விதிக்ககோரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் என்பவர் மனு கொடுத்திருந்தார்.

இந்த மனுவின் பேரில் நேற்று மாலை இரு தரப்பினருக்குமிடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு திருவள்ளூர் வட்டாட்சியர் என்.மதியழகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன், மணவாளநகர் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, வெங்கத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் லில்லி ஒயிட், மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ், ஒன்றிய கவுன்சிலர் கே.பி.எஸ்.கார்த்தி மப்பேடு வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் இரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அமைதி பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டது. அதாவது தேர் கோயிலை சுற்றி வந்த பிறகு பொதுவான பாதையில் தேர் நிறுத்தப்படும். அப்பொழுது காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் தேரை தரிசனம் செய்து கொள்ளலாம் என வட்டாட்சியர் அறிவிக்க, மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் இந்த பிரச்சினையை சமூகமாக முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என இருகரம் கூப்பி கையெடுத்து கும்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதால் அமைதிப் பேச்சுவார்த்தை சுமூகமாக தீர்வு காணப்பட்டது.