திருத்தணி முருகன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ. அரி தங்கத் தேர் இழுத்து பிரார்த்தனை :

பதிவு:2023-05-14 19:08:55

திருவள்ளூர் மே 13 : ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் ஒருமித்த பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதே போல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ. அரி தலைமையில் திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் தங்கத் தேர் இழுத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் எம்.ஜெயசேகர்பாபு, திருத்தணி நகர இளைஞரணி செயலாளர் கேபிள். எம்.சுரேஷ் ஆர்கே பேட்டை ஒன்றிய செயலாளர் நாகபூண்டி கோ .குமார், நிர்வாகிகள் நாகூர் பிச்சை, முனுசாமி , வேளச்சேரி பழனி, தர்மேஷ் மற்றும் நகர, ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் தங்கத்தேரை இழுத்து நூறாண்டு காலம் வாழ வேண்டும். அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை அரியணையில் அமர வைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளரும், திருத்தணி வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தின் தலைவருமான எம்.ஜெயசேகர் பாபு தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.அரி தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.