பதிவு:2023-05-14 19:10:41
திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒலி எழுப்பும் ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் மே 13 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒலி எழுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் வீடியோவில் ரூ.30,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்த நிலையில் நீதிமன்றம் தானாக முன்வந்து சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும், மணல் மற்றும் கனிம வள கொள்ளை வழக்கு வி.ஏ.ஓ படுகொலை,இயற்கை வள சுரண்டல் சட்டம் வாபஸ் பெற வேண்டும், ஏ.டி.எம். மது விற்பனை டாஸ்மார்க் தடை செய்ய பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் மணி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகர செயலாளர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர் ஆர்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மணி மற்றும் வேல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.