போளிவாக்கத்தில் தனியார் குடோனில் இளைஞர் ஒருவர் செல்போனை திருடி ஆடைக்குள் மறைத்து வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல் : இளைஞர் கைது :

பதிவு:2023-05-14 19:13:20

திருவள்ளூர் மே 13 : திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் செல்போன் உள்பட வீட்டு உபயோ பொருட்கள் சேமித்து வைத்து விற்பனைக்கு அனுப்பும் கிடங்கு செயல்பட்டு வருகிறது.இதில் அடிக்கடி விலை உயர்ந்த செல்போன்கள் மாயமாவதாக புகார் வந்தது. இதனால் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி.யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் கடந்த மார்ச் மாதம் ஏகாட்டூர் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஹரிஷ் மற்றும் அவனது நண்பன் அந்த செல்போன்கள் உள்ள அறையில் கணக்கெடுப்பது போல் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை திருடி தனது ஆடைக்குள் எடுத்து மறைக்கும் சிசிடிவி காட்சிகளை குடோன் நிர்வாகம் கண்டறிந்தது.

இது குறித்து குடோன் நிர்வாக அதிகாரி மணவாளநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஹரிஷ் என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் ஹரீசின் நண்பனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.