திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு : அடித்துக் கொலையா‌ என காவல் துறையினர் விசாரணை :

பதிவு:2022-04-30 10:49:14

திருவள்ளூர் ஏப் 28 : திருவள்ளூர் ரயில் நிலையம் ஒட்டி உள்ள புட்லூர் செல்லும் சாலை கற்குழாய் சாலை தெருவில் அடையாளம் தெரியாதவர் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் பாபிஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழுகிய நிலையில் இறந்த அடையாளம் தெரியாத நபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார் என்பது குறித்தும் முள் புதரில் மரத்துக்கு இடையில் இறந்து கிடக்கும் இந்த நபர் குடிபோதை தகராறில் எவரேனும் அடித்துக் கொலையா? அல்லது போதை உச்சியில் தலைக்கேறி நாக்கு வறண்டு இறந்துவிட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.