திருத்தணியில் போலி நகையை அடகுவைத்து ரூ.65 ஆயிரம் பெற்றுக் கொண்டு காரில் வேகமாக சென்ற பெண்ணை விரட்டிச் சென்று பேக்குடன் பணத்தை பிடிங்கிய நகைக்கடை வியாபாரி : பட்டப்பகலில் பரபரப்பு

பதிவு:2023-05-15 17:28:18

திருவள்ளூர் மே 15 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் அசோக்குமார் என்பவர் நகை அடகுக்கடை வைத்துள்ளார். அக் கடைக்கு இன்று மதியம் 12 மணிக்கு சென்ற பெண் ஒருவர் ஆதார் அட்டை காட்டி அசோக் குமாரிடம் 19 கிராம் செயின் அடகு வைத்து ரூ.65 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடைக்கு எதிரில் தயாராக இருந்த காரில் ஏறி புறப்பட சென்றார்.

அப்போது நகையை சோதனை செய்ததில் அது போலி நகை என்று தெரிந்தது. உடனடியாக கடையிலிருந்து ஓடிச் சென்ற அசோக்குமார் காரில் ஏறி புறப்பட்ட பெண்ணின் கார் கதவை பிடித்துக்கொண்டு சிறுது தூரம் விரட்டிச் சென்று பெண் கையிலிருந்த பேக்-கை சாதூர்யமாக பிடுங்கினார். இதனை அடுத்து கார் டிரைவருடன் அப்பெண் சென்றுவிட்டார்.

திருத்தணியில் மக்கள் நடமாட்டம், கண்காணிப்பு கேமராக்கள் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் போலி நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கடை உரிமையாளர் விரட்டிச் சென்று பணத்தை கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச் சம்பவம் தொடர்பாக நகைக்கடை வியாபாரி புகாரின் பேரில் கடையில் பொறுத்தப்படிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் பெண் வைத்திருந்த பேக்கில் இருந்த அதார் அட்டை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.