பதிவு:2023-05-15 18:08:56
திருவள்ளூரில் இருந்து ராமஞ்சேரி செல்லும் அரசு பேருந்து நடத்துனரை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் தலையில் பலமாக தாக்கி பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளை : பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதி :
திருவள்ளூர் மே 15 : திருவள்ளூர் பகுதியில் இருந்து ராமஞ்சேரி பகுதிக்கு பூண்டி வழியாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு ராமஞ்சேரி பகுதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் நபர் ஒருவர் ஏரி பயணச்சீட்டு வாங்காமல் பயணித்துள்ளார். அந்த நபரிடம் நடத்துனர் பயண சீட்டு வாங்குமாறு கேட்டுள்ளார்.
இதில் நடத்துனரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து இரவு நேரம் என்பதால் பேருந்து ஓட்டுநர் இலவசமாகவே பேருந்து பயணச்சீட்டை வழங்கிவிட்டு வந்த நிலையில் பூண்டி நெய்வேலி கூட்ரோடு பகுதியில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பேருந்தை வழிமறித்து நடத்துனரை கற்களால் தலை மற்றும் மூக்குத் தண்டு பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் பேருந்து கண்ணாடிகளை உடைத்து ஆறு பேரும் தப்பிச் சென்றனர். இதில் மூக்கு மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயங்களோடு அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த நடத்துனர் மோசஸ் பகவான் தாஸ் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டு மூக்கு தண்டுவடம் உடைந்து இரத்தப்போக்கு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேருந்து பயணச்சீட்டு வாங்காததை கேட்ட நடத்துனரை தொலைபேசி மூலம் தகவல் அளித்து கூட்டாளிகளை வரவழைத்து பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்ம நபர்கள் மீது பென்னாலூர்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.