பதிவு:2023-05-15 18:11:26
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது : திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் :
திருவள்ளூர் மே 15 : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
திருவள்ளூர் பெரியகுப்பத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நகரமன்ற உறுப்பினருமான வி.இ.ஜான் தலைமை தாங்கினார். அப்போது, மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் நிர்வாகிகள் ஜே.டி.அருள்மொழி, ஒய்.அஸ்வின்குமார், எஸ்.சரஸ்வதி, பூண்டி ராஜா, கே.டி.பிரகாஷ், மனோகரன், தயாளன், மோகன்ராஜ், உதயசங்கர், பாடலீஸ்வரன், கோட்டீஸ்வரன், வசந்த், மணிகண்டன், கௌதம், நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.