திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் புலம் பெயர்ந்த செங்கல் சேம்பர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கோடைக்கால முகாம் :

பதிவு:2023-05-15 18:13:14



திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் புலம் பெயர்ந்த செங்கல் சேம்பர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கோடைக்கால முகாம் :

திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் புலம் பெயர்ந்த செங்கல் சேம்பர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கோடைக்கால முகாம் :

திருவள்ளூர் மே 15 : திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் (சமக்ரசிக்ஷா அபியான்) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைந்து செங்கல் சேம்பர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கோடைக்கால முகாமினை திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிளாம்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளியிலும், பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட வயலாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் 3 நாட்கள் நடைபெற்றது.

இந்த முகாமில் குழந்தைகளின் திறமைகளை வெளி கொணர்வதற்கு ஏதுவாக பேச்சாற்றலை வளர்த்தல், பாடத்தின், ஓவியங்கள் வரைதல், கட்டுரை எழுதுதல், உரையாடல் திறனை வளர்த்தல், விளையாட்டு, குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை தடுத்தல் குறித்தும் பள்ளி படிப்பை தொடருதல் அவசியம் குறித்தும், பள்ளி படிப்பை இடையில் நிறுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் முகாமில் கலைநிகழ்ச்சிகள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.

கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற கோடைக்கால முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி கலந்து கொண்டு பேசியதாவது : கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்கள், சொந்த ஊருக்கு சென்ற பிறகும் கல்வி தொடர வேண்டும் குழந்தைகள் யாரும் வேலைக்கு செல்ல கூடாது என்றும் இந்த மூன்று நாள் முகாமை பற்றி மூன்று குழந்தைகள் பேசினார்கள். அவர்கள் பேசியதை கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது மற்றும் இந்த முகாமின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது என்று கூறினார்.செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில் குமார், கல்வித்துறை சார்ந்த உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, முன்னாள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப.செந்தில், திருவள்ளூர் மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கீதாஞ்சலி சம்பத், கிளாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நு.தணிகாசலம் ,வயலாநல்லூர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி,திருவள்ளூர் வட்டார வளமையத்தின் மேற்பார்வையாளர் மிகாவேல், பூந்தமல்லி வட்டார வளமையத்தின் மேற்பார்வையாளர் காயத்திரி ஆசிரியர்கள், சித்தி புத்தி விநாயகர் செங்கல் சேம்பர் உரிமையாளர் சீனிவாசன்,ஜெ.கே.பி. செங்கல் சேம்பர் உரிமையாளர் கிருஷ்ணன் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் பி.ஸ்டீபன், கள ஒருங்கிணைப்பாளர் ஜெ.பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.