பதிவு:2023-05-17 10:14:27
மாதவரம் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் ஆய்வு :
திருவள்ளூர் மே 16 : மாதவரம் அரசு தென்னை நாற்றுப் பண்ணை மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) வேதவல்லி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் நெட்டை இரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக. 2 தென்னங்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் மாதவரம் அரசு தென்னை நாற்றுப் பண்ணை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது, தென்னங்கன்றுகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்தார்.
மேலும் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட தென்ன’;கன்றுகள் விபரத்தினை ஆய்வு செய்தார். அலுவலர்களுக்கு உரிய தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கி தரமான முறையில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து வழங்குமாறு கூறினார்.
பிறகு உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை ஆய்வு செய்தார்.இங்கு உற்பத்தி செய்யப்படும் டி,விரிடி, சூடோமோனாஸ் புளுரோசன்ஸ், டிரைக்கோகிராம்மா கைளோனிஸ் மற்றும் கிரைசோபெர்லா ஆகிய உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றினை ஆய்வு செய்தார். பிறகு அலுவலர்களுக்கு திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
பின்னர் புழல் திரவ உயிர் உர உற்பத்தி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு. உயிர் உரங்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றினை ஆய்வு செய்தார்.