பதிவு:2023-05-17 11:25:39
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1432-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1432-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமனம் செய்தும் மற்றும் தணிக்கை தேதிகள் நிர்ணயம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஊத்துக்கோட்டை வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வருகிற ஜ-ூன் மாதம் 6, 7, 8,9,13,14,16 ஆகிய தேதிகளில் தணிக்கை செய்ய உள்ளார். பொன்னேரி வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் வருகிற ஜூன் மாதம் 6,7,8,9,13,14,15,16, 20,21,22,23,27,28,29 ஆகிய தேதிகளில் தணிக்கை செய்ய உள்ளார்.திருவள்ளூர் வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வருகிற ஜூன் மாதம் 6,7,8,9,13,14,15,16, 20,21,22,23 ஆகிய தேதிகளில் தணிக்கை செய்ய உள்ளார்.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலராக பொன்னேரி சப் கலெக்டர் வருகிற ஜூன் மாதம் 6,7,8,9,13, ஆகிய தேதிகளில் தணிக்கை செய்ய உள்ளார்.ஆவடி வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலராக திருவள்ளூர் வருவாய் கோட்ட அலுவலர் வருகிற ஜூன் மாதம் 6,7,8,9,13, ஆகிய தேதிகளில் தணிக்கை செய்ய உள்ளார்.திருத்தணி வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலராக திருத்தணி வருவாய் கோட்ட அலுவலர் வருகிற ஜூன் மாதம் 6,7,8,9,13,14,15,16, 20 ஆகிய தேதிகளில் தணிக்கை செய்ய உள்ளார்
ஆர்.கே.பேட்டை வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலராக தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) வருகிற ஜூன் மாதம் 6,7,8,9,13 ஆகிய தேதிகளில் தணிக்கை செய்ய உள்ளார்.பூந்தமல்லி வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலராக திருவள்ளூர் கலால் உதவி ஆணையர் வருகிற ஜூன் மாதம் 6,7,8,9,13 ,14 ஆகிய தேதிகளில் தணிக்கை செய்ய உள்ளார்.பள்ளிப்பட்டு வட்டத்தில் வருவாய் தீர்வாய் அலுவலராக திருவள்ளூர் கிழக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வருகிற ஜூன் மாதம் 6,7,8,9 ஆகிய தேதிகளில் தணிக்கை செய்ய உள்ளார்.
எனவே சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பொது மக்கள் முன்னதாகவே தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். வருவாய் தீர்வாயத்திற்கு முன்னர் அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது வருவாய் தீர்வாய மனு என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாகவும், கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே நடைபெற உள்ள வருவாய் தீர்வாய நிகழ்ச்சியினை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டார்.