பதிவு:2023-05-17 12:43:53
திருவள்ளூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக SSC/Railway/Banking போன்ற தேர்வுகளுக்கு நேரடி வகுப்பறை பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக மத்திய தேர்வாணையம் நடத்தும் SSC/Railway/Banking போன்ற தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் 25.05.2023 முதல் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியில்; நேரடி வகுப்பறை பயிற்சி சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சியில் 300 மணிநேரம் வகுப்புகள், தனிவழிகாட்டல், 120-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் என 100 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 20.05.2023க்குள் https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை தெரிவிக்க வேண்டும்.இவ்விலவச பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 6382433046 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.