புதுவாயில் அருகே ரேஷன் அரிசி, கோதுமையை கடத்திய நபர் கைது :

பதிவு:2022-04-29 22:09:47



புதுவாயில் அருகே ரேஷன் அரிசி, கோதுமையை கடத்திய நபர் கைது :

புதுவாயில் அருகே ரேஷன் அரிசி, கோதுமையை கடத்திய நபர் கைது :

திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மினி லாரியை போலீசார் சோதனை செய்தபோது அதில் 2100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 500 கிலோ கோதுமை இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ராஜா (26) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2100 கிலோ ரேஷன் அரிசி, 500 கிலோ கோதுமை மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்தனர். பிறகு ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை கடத்தி வந்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.