திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

பதிவு:2023-05-17 12:48:58

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சுப்பிரமணி, மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி, மாநில துணைத்தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஸ்டான்லி போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கிளை சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்தனர். முதல் கட்டப் போராட்டம் முடிவுற்ற நிலையில், 2 ஆம் கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் மூன்றாம் கட்டமாக வரும் 22 ஆம் தேதி சென்னையில் மாநில அளவில் கோட்டையை நோக்கி பேரணி செல்வோம் என்றார். இறுதியில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.