பதிவு:2023-05-17 12:55:15
திருவள்ளூர் மாவட்டத்தில் "சிறகுகள் 200" என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள 49 மாணவ மாணவியர்களுக்கு புத்தாடைகள் :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9-ம்வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக் கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சுய சிந்தனையையும், தொலைநோக்கு பார்வையும் வளர்க்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் "சிறகுகள் 200" என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
அம் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின்படி, பூவிருந்தவல்லி, எஸ்.கே.ஆர்.பொறியியல் கல்லூரியில் சிறப்பு நிபுணர்கள் மூலம் கடந்த மே-10 முதல் நடைபெற்று வரும் உண்டு உறைவிட கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து காண்டுள்ள 49 மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கிணங்க புத்தாடைகள் வழங்குவதற்கேதுவாக போரூர், சரவணா ஸ்டோருக்கு அம்மாணவ மாணவியர்களை வாகனத்தில் பாதுகாப்பான முறையில் அழைத்துச் செல்லப்பட்டு, தலா ரூ.2,000 வீதம் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புத்தாடைகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.
இதில் துணை ஆட்சியர் பயிற்சி சுபலட்சுமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பவானி, மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.