+2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை

பதிவு:2023-05-18 20:04:52



திருவள்ளூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை

+2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை

திருவள்ளூர் மே 18 : திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். காக்களூர் தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் இவரது மகள் அனிதா (17). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ் டூ முடித்த அனிதா 600 க்கு 435 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

நன்றாக படித்து வந்த நிலையில் அதிக மதிப்பெண்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந் நிலையில் நேற்று இரவு அனிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் தாலுகா போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிளஸ் டூவில் 600 க்கு 435 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் குறைவான மதிப்பெண்கள் பெற்றதாக கூறி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.