திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் :

பதிவு:2023-05-18 20:07:51



திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் மே 18 : தமிழகம் முழுவதும் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் மு. வினோத் கண்ணா தலைமை தாங்கினார்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நா.ரகுநாதன், ஹிந்து ஆட்டோ தொழிலாளர் மாவட்ட தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாரத ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அஸ்வின் குமார் ஜி, மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்யா சீனிவாசன்,மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, ஓலா,ஊபர்,ராபிடோ,போர்ட்டர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்,ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும்,ஓலா,ஊபர்,ராபிடோ போல் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும், போக்குவரத்து அபராதங்களை குறைக்க வேண்டும் போன்ற ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநில தலைவர் மணலி மனோகர்ஜி, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநில இணை செயலாளர் சத்தியமூர்த்தி ஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 80 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.