பதிவு:2023-05-19 12:27:19
திருத்தணியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை : மாநில நெடுஞ்சாலையில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு : மூன்று மின்கம்பங்கள் சாய்ந்ததால் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் அவதி :
திருவள்ளூர் மே 19 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்தது, மேலும் திருத்தணி அருகில் உள்ள அகூர், நத்தம், கோரமங்கலம், கேஜி கண்டிகை ஆகிய பகுதிகளில் மாநில நெடுஞ்சாலையில் காற்றுடன் பெய்த மழை காரணமாக புளிய மரங்கள் சாலையில் சாய்ந்தது இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாகனங்கள் மாநில நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கின்றன, சாலையில் விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். அதேபோல் மாம்பாக்கம் கிராமத்தில் சூறாவளி காற்றால் மூன்று மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சாய்ந்தமின் கம்பங்களை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.