திருமழிசை, காக்களூர், அம்பத்தூர் ஆகிய சிட்கோ தொழிற்பேட்டைகளில் சுமார் ரூ.110 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் : குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு :

பதிவு:2023-05-19 12:43:19



திருமழிசை, காக்களூர், அம்பத்தூர் ஆகிய சிட்கோ தொழிற்பேட்டைகளில் சுமார் ரூ.110 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் : குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு :

திருமழிசை, காக்களூர், அம்பத்தூர் ஆகிய சிட்கோ தொழிற்பேட்டைகளில் சுமார் ரூ.110 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் : குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு :

திருவள்ளூர் மே 19 : திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை, காக்களுர் சிட்கோ தொழிற்பேட்டைகள் மற்றும் அம்பத்தூர் சிட்கோ ஆகிய தொழிற்பேட்டைகளில் சுமார் ரூ.110 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களுர், திருமழிசை மற்றும் அம்பத்தூர் ஆகிய மூன்று தொழிற் பேட்டைகளில் உள்ள அடிப்படை வசதிகள் சரியாக செயல்பட்டு வருகிறதா என்பதை ஆய்வு செய்தோம் இந்த காக்களுர் தோழிற்பேட்டையில் உள்ள அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதற்காக ரூ.8.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. அதேபோன்று திருமழிசை தொழிற்பேட்டையில் ரூ.6.89 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, 53 தொழிற்பேட்டைகளில் கடந்த ஆட்சியில் எந்த அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாமல் இருந்துள்ளன. அந்த 53 தொழிற்பேட்டையில் உள்ள தொழில் முனைவோர்களின் வேண்டுகோளை ஏற்று ரூ.15 கோடி மதிப்பீட்டில் அந்த அனைத்து தொழிற்பேட்டைகளில் தேவையான அடிப்படை வசதிகள் எல்லாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, தொழிற்பேட்டை துவங்க 50 ஏக்கர், 100 ஏக்கர் இருக்க வேண்டும். அடுக்குமாடி தொழிற் வளாகங்கள் அமைத்து அங்கு தொழிற்சாலை சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.90.13 கோடி மதிப்பீட்டில் 152 தொழிற்சாலைகளில் 80 சதவிகிதம் வேலை முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் தொழிற் துவங்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.60.55 கோடி மதிப்பீட்டில் 112 தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் 80 சதவிகிதம் பணிகள் முடிந்துள்ளது. இந்த இரண்டு தொழிற்பேட்டைகளிலும், அடுக்குமாடி தொழிற்பேட்டைகளிலும் இரண்டு, மூன்று மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்கள்.

அதுமட்டுமின்றி, 2023-2024 இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பில் இந்த கிண்டி தொழிற்பேட்டையில் வேலூரில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழிற்பேட்டைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழிற்வளாகமும், மதுரை மாவட்டத்தில் கேபுத்துர் தொழிற்வளாகத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் மூன்று இடங்களில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழிற்வளாகங்கள் அமைப்பதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, வெளிமாவட்டங்களிலிருந்து காக்களூர் தொழிற்பேட்டையில் வேலை செய்பவர்கள் வந்து செல்பவர்களின் சிரமங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று வெளி மாவட்டங்களில், வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வந்து தங்குவதற்கான இட வசதிக்காக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.29.45 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

கோவையில் உள்ள குறுச்சி தொழிற்பேட்டையில் 510 தொழிலாளர்கள் தங்குவதற்கு ரூ.22 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதிகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி, 122 தொழிற்பேட்டை இருந்துள்ளது. இந்த இரண்டு வருடங்களில் 5 தொழிற்பேட்டை உருவாக்கியிருக்கிறோம். 8 தொழிற்பேட்டை தயாராகி வருகிறது. பட்டா கொடுக்காத இந்த 3200 ஏக்கருக்கான தொழிற்பேட்டைகளில் பட்டா வழங்கப்படும்

முன்னதாக, திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் சிட்கோ சார்பில் ரூ.6.81 கோடி மதிப்பீட்டில் சாலைகள், மழை நீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு குட்டை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அவ்வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, திருநின்றவூர் பகுதியில் தொழில் வணிகத் துறையின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மானியத் தொகை ரூ.21.24 இலட்சம் பெற்று ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ப்ளு மௌன்ட் டைக்னாஸ்டிக் சென்டர் என்ற தனியார் பரிசோதனை மையத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, காக்களுர் தொழிற்பேட்டையில் 475 தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.72 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 8 இலட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தொழிற்பேட்டையின் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரித்திடுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், காக்களுர் தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் 9000 சதுர அடி பரப்பளவில் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது உற்பத்தி மைய கட்டிடத்தினையும், காக்களுர் தொழிற்பேட்டை மத்திய மின்பொருள் சோதனை கூடத்தில் ரூ.8.27 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. விளக்குகள் சோதனை கூடம் மற்றும் தீ பரவாமல் தடுக்கும் மின்சார கேபிள் சோதனை கூடம் ஆகியவற்றையும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், காக்களூர் தொழிற்பேட்டையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட தொழில் மையம் சார்பாக புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக தொழில் துவங்கபடவுள்ள 9 தொழில் முனைவோர்களுக்கு அரசு மானிய தொகையாக ரூ.1.35 கோடி பெறுவதற்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள், தொழில் வணிகத்துறையின் திட்டத்தில் ரூ.21 இலட்சம் மானியம் பெற்று தொழில் தொடங்கிய பெண் தொழில் முனைவோரின் ப்ளு மவுண்ட் டையக்னோஸ்டிக்ஸ் தொழிற்சாலையையும், ரூ.46 இலட்சம் மானியத்துடன் பெண் தொழில் முனைவோரால் தொடங்கப்பட்ட மகா எஞ்னியர்ஸ் தொழிற்சாலையையும், ரூ.50 இலட்சம் மானியத்தில் துவங்கப்பட்ட 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கே-லைட் உயர் தர மற்றும் கட்டிடக்கலை விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையையும், ரூ.30 இலட்சம் மானியத்தில் துவக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் எச்.பி வால்வ்ஸ் அண்ட் ஃபிட்டிங்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட், தொழிற்சாலையையும் நேரில் பார்வையிட்டார்கள்.

அதனை தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.60.55 கோடி மதிப்பீட்டில் 1.31 லட்சம் சதுர அடியில் 112 தொழிற்கூடங்களுடன் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி தொழில் வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள், தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மின் தூக்கிகள், கனரக வாகனங்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்லும் வகையில் சாலைப் பணிகள், இங்கு பணிபுரியும் தொழிலார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை நல்ல முறையில் அமைக்க வேண்டும் எனவும், கட்டிடத்தின் தரத்தினை ஒவ்வொரு நிலையிலும் பொறியாளர்கள் உறுதி செய்து திட்டத்தை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அறிவுறித்தினார். மேலும், ரூ.1.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.29.47 கோடி மதிப்பில் 5 தளங்களுடன் 810 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர் தங்கும் விடுதியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு கட்டிடப் பணிகளை காலதாமதம் இன்றி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வுகளில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய்,தொழில் வணிக ஆணையர் சிஜி தாமஸ் வைதயன்,சிட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம், கண்காணிப்பு பொறியாளர் எம்.ஆர். சோமசுந்தரம், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சேகர், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.