பட்டதாரி ஆசிரியர் கழக முப்பெரும் விழா

பதிவு:2023-05-19 12:58:37



தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா திருவள்ளூரில் நடைபெற்றது.

பட்டதாரி ஆசிரியர் கழக
முப்பெரும் விழா

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றுக் கொடுத்த மாநில சட்ட செயலாளர் சாமி அவர்களுக்கு பாராட்டு விழா, புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட, மாநில, வட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மே தின விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் வி. கன்னி ராஜு தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ஈ. அருள் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் தமிழரசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, இணை செயலாளர்கள் ரகுநாத் , ஜெயபிரகாஷ் , கிளாம் பாக்கம் ரவி, மகேஷ், ஜெகன், சரவணன், ராஜ்காளை, வள்ளிமுத்து, மாவட்ட மகளிர் அணி தலைவர்கள் தேன்மொழி, சுமதி, வேண்டாம் பாய், மங்கையர்க்கரசி, பாரதி, மாவட்ட அமைப்பு செயலாளர் சௌந்தர பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முன்னாள் மாநில பொருளாளர் காஞ்சிபுரம் கே. ஜி. பாஸ்கரன் வாழ்த்தி பேசியது: உயர்நிலைப் பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர் பதவி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கோரிக்கை வைத்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தாலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதற்கு மாநில சட்ட செயலாளர் சாமி பல முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு உறுதுணையாக நிறுவனத் தலைவர் மாயவன், மாநில தலைவர் பக்தவச்சலம், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி நமக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது .

இதற்காக நடைபெறும் பாராட்டு விழா மிகவும் பொருத்தமானது, வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என்றார். மாநில சட்ட செயலாளர் சாமி: பட்டதாரி ஆசிரியர் ஒருவர் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வில் ஊதிய உயர்வுடன் செல்கிறார். அவர் அதே ஊதிய நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு என்ற பெயரில் மாறுதலாகி செல்கிறார். தலைமை ஆசிரியர் பதவிக்கு செல்லும்போது அவருக்கு ஊதிய உயர்வு ஏதும் கிடையாது. முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வில் சென்ற அவர் தலைமை ஆசிரியராக மாற்றுப்பணி போல் செயல்படுவதால் ஒருவருக்கு இரு பதவிகள் கூடாது என்ற அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதேபோன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு செல்ல பணிமூப்பு வரிசை படுத்தாதற்கு கடந்த ஆண்டு சென்னை மாவட்ட நிர்வாகி குமார் தலைமையில் சென்னையில் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே என சில சங்கங்கள் வழக்கு தொடுத்து இருந்தாலும் ஓட்டப்பந்தயத்தில் யார் முதலில் ஓடுகிறார்கள் என்பதை விட யார் முதலில் இலக்கு கோட்டினை அடைகிறார்கள் என்பதில் தான் வெற்றி உள்ளது.

அதைப்போல சில சங்கங்கள் வழக்கு தொடுத்து இருந்தாலும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பதவி உயர்வில் செல்வதற்கு முதல் கட்டமாக நமது பேரியக்கம் தடையானை பெற்றுள்ளது.

அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரிக்கப்பட்டு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி பட்டதாரி ஆசிரியர்களுக்கே என்ற தீர்ப்பை நீதி அரசர்கள் வழங்கி இருப்பது பாராட்டுதலுக்குரியது.

பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் முதுகலை பட்டதாரி ஆசிரியராக செல்லலாம் அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணி ஏற்கலாம் என்ற தெளிவான முடிவு தற்போது கிடைத்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிறைவு பெறுவதற்குள் ஏதாவது ஒரு பதவி உயர்வு கிட்டும். இதற்கு நமது சங்கம்தான் காரணம் என்றார் சாமி.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.நாகலிங்கம், மாவட்ட பொருளாளர் வி. ரவி, மாவட்ட மகளிர் அணி தலைவி வேண்டா பாய், துணைத் தலைவர் ஆவடி பா குப்புராஜ், தமிழ் ஆசிரியர் பாரதிராஜா, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரஜினி வாழ்த்தி பேசினர். மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் நன்றி கூறினார்.