பதிவு:2023-05-22 15:47:19
திருவள்ளூர் சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர் மே 22 : திருவள்ளூர் சிவின் என்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.இந்த பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் மண்டல தலைவர் பி.எஸ் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் திருவள்ளூர் சிவில் என்ஜினியர் அசோசியேசன் தலைவராக ஏ.நவீன் குமாரும், செயலாளராக ஆர்.காண்டீபன், பொருளாளராக கே ஜெகதீஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும் கட்டுமான பொருட்கள் விலை அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பொறியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால் விலை நிர்ணய குழு அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதில் சங்க நிர்வாகிகள் டி.ரவிச்சந்திரன், கே. வினோத் ராஜா, ஐ. ஞானசேகர், எஸ்.பழனி, பி. கௌதம், எச். ஜெயபிரகாஷ், பி. கார்த்திகேயன், எஸ். பழனி, வி. னகங்காதரன் டி.பாபு மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.