திருத்தணி அருகே 108 ஆம்புலன்சில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு மருத்துவ உதவியாளர் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது : தாயும் சேயும் நலம்

பதிவு:2023-05-22 15:52:24

திருவள்ளூர் மே 22 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா, கீச்சளம் காலனி என்ற கிராமத்தில் இருந்து 108 கட்டுப்பாடு அறைக்கு இன்று அதிகாலை பிரசவ வலி தொடர்பாக அவசர அழைப்பு வந்தது. உடனடியாக பொதட்டூர்பேட்டை பகுதயில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் ரமேஷ் மற்றும் ஓட்டுநர் சுந்தரமூர்த்தி ஆகியோர் ஆம்புலன்சில் விரைந்தனர். அங்கு தனியார் துறையில் பணிபுரியும் விஷ்ணு (24) என்பவரது மனைவி சௌவுமியா (19) பிரசவ வலியால் துடித்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ்சில் ஏற்றிக் கொண்டு வந்தனர். அப்போது பிரசவ வலியால் சௌமியா துடித்ததால் அந்த நேரத்தில் மருத்துவ உதவியாளர் ரமேஷ் சாதுர்யமாக செயல்பட்டு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்தார். காலை 5: 55 மணிக்கு பாபிரெட்டிபள்ளி என்ற இடத்தில் வந்த போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது அவருக்கு முதல் குழந்தை ஆகும்.

குழந்தையின் எடை 2.550 கிலோ எடை இருந்தது. அதனைத் தொடர்ந்து தாயும் சேயும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்ததால் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.