பதிவு:2023-05-22 20:31:08
சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை :
திருவள்ளூர் மே 22 : திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியில் இயங்கி வரும் சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்தனர்.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சையத் அக்பர் அஹமத் 590 மதிப்பெண்களும், நிவாஸ் 521 மதிப்பெண்களும், தீனா பாலாஜி 519 மதிப்பெண்கள் பெற்றனர்.
பிளஸ் 1 பொது தேர்வில் சையதா குப்ரா மசூர் 589 மதிப்பெண்களும், பெற்று ராஜேஸ்வரி 522 மதிப்பெண்களும், பிரியதர்ஷினி 502 மதிப்பெண்கள் பெற்றனர்.
மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஹிக்கேஷ்வர் 481 மதிப்பெண்களும், ரஞ்சன் 468 மதிப்பெண்களும், ஸ்ரீராம் 464 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுடலைமுத்து பாண்டியன்,முதல்வர் ரங்கராஜன்,மேலாளர் சதீஷ் ஆகியோர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.