அதிமுக பேரணி - 5,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

பதிவு:2023-05-22 20:55:18



அதிமுக பேரணி - 5,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

அதிமுக பேரணி - 5,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற 5,500 அதிமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.

அதன்படி இன்று காலையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவர் தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடைபெற்றது.

பேரணி கவர்னர் மாளிகையை சென்றடைந்ததும் முக்கிய நிர்வாகிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார். இந்த நிலையில் சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற 5,500 அதிமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பாலகங்கா உள்ளிட்ட 5,500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.