திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 17 நாட்களில் 89 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் 338 கிராம் தங்கம், 6 ஆயிரத்து 165 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கை :

பதிவு:2023-05-24 15:15:06

திருவள்ளூர் மே 23 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதே போல் கிருத்திகை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு காணிக்கையை செலுத்திவிட்டு செல்கின்றனர்.

அதேபோல் திருத்தணி உபகோயில்களிலும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோயில் ஊழியர்களின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

அதன்படி கடந்த 17 நாட்களில் 88 லட்சத்து 9 ஆயிரத்து 332 ரூபாயும், 338 கிராம் தங்கம், 6 ஆயிரத்து 165 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.