திருவள்ளூர் நகராட்சி சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவிடும் வகையில் பழைய சீருடைகள், பாடப்புத்தகங்கள் சேகரிக்கும் நிகழ்ச்சி : நகர்மன்றத் தலைவர் தொடங்கி வைத்தார் :

பதிவு:2023-05-24 15:18:14

திருவள்ளூர் மே 23 : திருவள்ளூர் நகராட்சி சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவிடும் வகையில் பத்தாம் வகுப்பு 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு வகுப்புகளை முடித்த மாணவர்கள் தங்களது பழைய புத்தகங்களை நகராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வைத்து விட்டால் பாடப் புத்தகங்கள் சீருடைகள் தேவைப்படும் நபர்கள் அங்கு வந்து இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதற்காக யாரிடமும் அனுமதி கோரத் தேவையில்லை என்ற விதியின்படி நகராட்சி அலுவலகத்தில் பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குடைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏழை சிறுவர்களுக்காக பொம்மைகள், பள்ளி மாணவர்களின் சீருடைக்காக பயன்படுத்திய ஷூக்கள் மற்றும் காலணிகள் ஆகியவற்றையும் அதில் வைக்கலாம் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். திருவள்ளூர் தேரடியில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவிற்கு நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் கே.கோவிந்தராஜூ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பகுதியில் உள்ள பெண்கள் தாய்மார்கள் கலந்து கொண்டு தங்களது பிள்ளைகளின் பழைய புத்தகங்கள், சீருடைகள், ஷுக்கள் ஆகியவற்றை நகராட்சி கூடையில் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற கவுன்சிலர்கள் டி.கே. பாபு, பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.